×

உலக உணவு தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

பந்தலூர், ஜூன் 11:  பந்தலூர் அருகே உலக உணவு தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஏகம் பவுண்டேஷன் சார்பில் பாதுகாப்பான உணவு, ஆரோக்கியமான வாழ்வு என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தேவாலா அண்ணை வேளாங்கண்ணி கணினி பயிற்சி மையத்தில் நடந்த கருத்தரங்கிற்கு கணினி பயிற்சி மைய ஆசிரியர் தனுஷ்கா தலைமை தாங்கினார். இதில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில்,``மனித வாழ்வுக்கு மிகவும் அடிப்படையான ஒன்று உணவு. இவை சரிவிகித ஊட்டச்சத்து தரக்கூடிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டியது
அவசியம். உணவு மூலம் கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் மட்டுமே உடல் உறுப்புகளை சரியான வழியில் செயல்படுத்த உதவும் என்பதனால் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை தேர்வு செய்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அறுசுவை உணவுகளையும் அளவோடு எடுத்துக் கொள்ளுதல் அவசியம். எண்ணெய் வகை உணவுகள் மற்றும் இனிப்பு கார வகை உணவுகள் ரசாயனம் கலந்த உணவுகளை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்தை காக்கும்’’ என்றார்.  
இந்நிகழ்ச்சியில், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், அப்துல்கலாம் பொது சேவை மையம் தலைவர் செல்வநாயகம், கணிணி பயிற்சி மைய மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : World Food Day Awareness Seminar ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை