×

அரசியலுக்கு ஆசைப்பட்டு அரசு வேலையை விட்டவர் இப்போ தவிக்கும் கதையை கூறுகிறார்: wiki யானந்தா

‘‘சா ப்பாடு கணக்கு எழுதி சம்திங் பார்க்கிறாராமே பெண் காக்கி…’’ என்று கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர்  மாவட்டம் 15வது பட்டாலியன்ல பெயரின் முடிவில் ராணி பெயரை கொண்ட 3 ஸ்டார்  பெண் காக்கி பணிபுரிஞ்சு வர்றாங்க. இவங்க பட்டாலியன்ல தனக்கு கீழ் ரேங்குல  பணிபுரியுற காக்கிங்க கிட்ட ரொம்பவே பாகுபாடு பாக்குறாங்களாம். தனக்கு  வேண்டிய காக்கிங்களா இருந்தா, லீவு கேட்ட உடனே, எந்த மறுப்பும் தெரிவிக்காம  பர்மிஷன் கொடுக்குறாங்களாம். மத்த காக்கிங்க லீவு கேட்டா, ஆளே இல்ல, நீ  லீவு கேட்டா எப்படின்னு ஒருமையில பேசுறாங்களாம். அதுமட்டும் இல்லாம,  பட்டாலியன்ல இருக்குற காக்கிங்க பாதுகாப்பு பணிக்காக வெளியே போனா,  அவங்களும் மெஸ்சுலதான் சாப்பிட்டாங்கன்னு கணக்கு எழுதி வெச்சி, அதுலயும்  சம்திங் பார்க்குறாங்களாம். இப்படி அந்த 3 ஸ்டார் பெண் காக்கியின்  அட்டகாசம் ஓவரா இருக்குதாம். அவரோட ஆட்டம் உயர் காக்கிங்க காதுக்கு போகாம  பாத்துக்குறதுல அங்கங்கே ஆள் போட்டு வெச்சிருக்காங்களாம். இதுக்கு  முற்றுப்புள்ளி வைக்கணும்னு பட்டாலியன் காக்கிங்க குமுறி வர்றாங்க’’ என்றார் விக்கியானந்தா.‘‘அரசியலுக்கு ஆசைப்பட்டு அரசு வேலையை விட்டவர் இப்போ தவிக்கிறாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘குடிநீர்  வடிகால் வாரிய  அதிகாரியாக இருந்தவர் வருண பகவான் பெயர் கொண்டவர்.  இலைக்கட்சி விசுவாசியான இவர், 2019 சட்டமன்ற  இடைத்தேர்தலில் சீதை நாயகர்  பெயரிலான மாவட்டத்தின் குடி-யில் முடியும்  ஊர் கொண்ட தொகுதியில் போட்டியிட  விரும்பி தனது அரசு பதவியை ராஜினாமா  செய்தார். ஆனால் அந்த தேர்தலில்  இலைக்கட்சி தலைமை அவரது விருப்பத்திற்கு  தடை போட்டது. ஆனாலும் அசந்து  போகாத அந்த வருண பகவான், அதே ஆண்டில் 2019  உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட  அளவிலான பதவிக்கு களமிறக்கப்பட்டார். வெற்றி  பெற்று விடுவேன் என  அன்பளிப்புகளை அள்ளித்தெளித்தும், அவருக்கு தோல்வியே  பரிசாகக் கிடைத்தது.  இதனால் மனம் நொந்தவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் சீட்  கேட்க  எண்ணியிருந்தார். மீண்டும் ரெட் கார்ட். தொடர் நச்சரிப்பால்  தற்போது  நடைபெறவுள்ள மாவட்ட கவுன்சில் வார்டு இடைத்தேர்தலில் போனா  போகட்டும் என  இலைக்கட்சி தலைமை இம்முறை சீட் கொடுத்திருக்கிறது. களமிறங்கி  வாக்கு  சேகரித்து வந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தபோதே சூரிய வெளிச்சம்  பரவிய  இப்பகுதியில், எப்படி ஜெயிக்கப் போகிறோம் என்ற மிகப்பெரிய கேள்வி  எழும்பி  நிற்பதால், சோர்வுடனேயே இவரது பிரசாரப்பணிகள் தொடர்கிறது.  அரசியலுக்காக  அரசு பதவியை துறந்தது எவ்வளவு பெரிய தப்பு என்று  இப்போது பார்ப்போரிடம்  எல்லாம் புலம்பி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாங்கனி மாவட்ட கல்வி அதிகாரிக்கும், வாத்தியாருங்களுக்கும் இடையே குஸ்தியாமே..’’‘‘ஆமா..  கல்வித்துறையில இப்போ இதுதான் ஹாட் டாபிக். மெமோ-வுக்கு புகழ்பெற்ற கல்வி  அதிகாரி சமீபத்துல, மாங்கனி மாவட்டத்துல பொறுப்பேத்துக்கிட்டாரு. அவரோட  மாறுதல் தகவல் கெடச்சதுமே கதிகலங்கிப் போன வாத்தியாருங்க, எப்படியாவது  இவருகிட்ட இருந்து தப்பிக்கணும்னு ரூம் போட்டு யோசிக்க ஆரம்பிச்சாங்களாம்.  ஆனா அவங்க எதிர்பார்த்தபடியே தினசரி டெஸ்ட், தனி ரெக்கார்ட் பராமரிப்பு,  பெற்றோரிடம் கையெழுத்துனு அதிரடி உத்தரவு போட்டாராம் அதிகாரி. தினசரி  டெஸ்ட் வச்சா பசங்க ஸ்கூலுக்கு வரமாட்டாங்க, பெற்றோரிடம் கையெழுத்து  வாங்குறது கஷ்டம்னு எவ்வளவோ சொல்லியும், உத்தரவு வாபஸ் ஆகலயாம். இதனால  அதிருப்தியான வாத்தியாருங்க, நேரா டைரக்டருக்கு புகார தட்டிவிட்ருக்காங்க.  ஆனாலும் கட்டாயம் டெஸ்ட் நடத்தியே ஆகணும்னு அதிகாரியோட அலுவலக உத்தரவு,  வாத்தியாருங்களுக்கு போயிருக்காம். இதனால நீயா, நானா போட்டிக்கு  அதிகாரியும், வாத்தியாருங்களும் மல்லுகட்டிக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஆவினில் என்ன பிரச்னை..’’‘‘தமிழகம்  முழுவதும் ஆவினில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள  நிலையில் நெல்லை, தூத்துக்குடி ஆவினுக்கு இடையே அக்கப்போர் நடக்கிறது.  அதாவது, நெல்லை ஆவினை பிரித்து கடந்த 2019ம் ஆண்டு தூத்துக்குடி ஆவின்  உருவாக்கப்பட்டது. அதனால் நெல்லை ஆவினில் இருந்து தூத்துக்குடி ஆவினுக்கு  பால் கொள்முதல் செய்து வழங்கப்பபட்டது. இதற்கான தொகை ரூ.4.39 கோடி நெல்லை  ஆவினுக்கு தூத்துக்குடி ஆவின் நிறுவனம் செலுத்த வேண்டும். பால் விற்று காசு  சேர்த்துக் கொண்டு கொள்முதல் செய்த நெல்லை ஆவினுக்கு தொகையை செலுத்தாமல்,  தூத்துக்குடி ஆவின் நிறுவனம் டிமிக்கி கொடுத்து வருகிறதாம். இதற்காக பலமுறை  கடிதம் எழுதியும், கணக்கு பார்க்கிறோம் எனச் சொல்லி இழுத்தடித்து  வருகிறார்களாம்.  இதனால் நிதி நெருக்கடியில் தவிக்கும் நெல்லை ஆவின்  பாக்கித்  தொகையை எப்படி வசூல் செய்வது என திண்டாடி வருகிறது. அது  மட்டுமல்லாது ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமனம் செய்யக் கூடாது என்ற ஆணையரின்  உத்தரவையும் மீறி தூத்துக்குடி ஆவினில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் கோலோச்சி  வருகின்றனராம்’’ என்றார் விக்கியானந்தா….

The post அரசியலுக்கு ஆசைப்பட்டு அரசு வேலையை விட்டவர் இப்போ தவிக்கும் கதையை கூறுகிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,Yananda ,Peter ,Vailur district ,wiki Yananda ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...