×

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு ஆண்டு தோறும் சீரான அளவில் மழை பெய்ய வில்லை. தென் மேற்கு பருவ மழை மே மாதத்தில் பெய்யத் தொடங்கும். கடந்த 10ஆண்டுகளில் 2017ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை 526 மி.மீ, 2018ம் ஆண்டு தென் மேற்கு பருவ மழை 306.21 மி.மீ பெய்ததே சராசரி மற்றும் அதைவிட கூடுதலாக மழை பெய்ததாகும். மற்ற ஆண்டுகளில் தென் மேற்கு பருவமழை குறைவாகவே பெய்துள்ளது.இம்மாவட்டத்திற்கு வடகிழக்கு பருவ மழையே விவசாயம் மற்றும் குடிநீருக்கு கைகொடுக்கும். கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் இருந்து மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டும் கன மழையும், மற்ற பகுதிகளில் லேசான மழையும் பெய்தது. செப்டம்பர் மாத கடைசி வாரம் மற்றும் அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் மழை பெய்தது. அக்.26ல் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது.ஏப்ரல் வரை நான்கு மாதங்களாக லேசான மழை கூட மாவட்டத்தில் பெய்யவில்லை. கடந்த மாதம் லேசான மழை சில பகுதிகளில் மட்டும் பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:மழை பெய்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. தற்போதும் கத்திரி வெயில் காலம் போல் கடுமையான வெயில் அடிக்கிறது. பகலில் வெயிலின் தாக்கத்தால் வெளியில் செல்ல முடியவில்லை. மழை பெய்தால் தான் வெயிலின் தாக்கம் குறையும் என்றனர்.

Tags : Weil ,
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்