×

விழிப்புணர்வு பேரணி ஊட்டி - குன்னூர் சாலையில் உள்ள கால்வாய்களில் குவிந்துள்ள குப்பை

ஊட்டி:  ஊட்டி - குன்னூர் சாலையில் உள்ள பல்வேறு மழைநீர் கால்வாய்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் மழை காலங்களில் சாலை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மேட்டுபாளையம் முதல் ஊட்டி, கூடலூர் வழியாக மைசூர் வரையுள்ள சாலை உள்ளது. இச்சாலை தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தை மற்ற சமவெளி பகுதி மாவட்டங்களுடனும், அண்டை மாநிலங்களுடனும் இணைக்க கூடிய முக்கிய சாலையாக இச்சாலை விளங்கி வருகிறது. ஊட்டிக்கு சுற்றுலா வர கூடிய சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஊட்டி - குன்னூர் இடையே உள்ள இச்சாலையில் பல இடங்களில் வேலிவியூ, மந்தாடா, எல்லநள்ளி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் வழிந்தோட வசதியாக சாலைக்கு அடியில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மண் நிரம்பியும், குப்பைகள் நிரம்பியும் காணப்படுகின்றன. குறிப்பாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வீசி எறிய கூடிய பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவு உள்ளன. இதனால் கழிவுநீர், மழைநீர் போன்றவைகள் செல்ல முடிவதில்லை. இதனால் மழைநீர் சாலையில் வழிந்தோடும் நிலை உள்ளது.

Tags : Coonoor Road ,
× RELATED தொடர் கனமழையால் மேட்டுப்பாளையம் –...