×

சேந்தமங்கலம் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு

சேந்தமங்கலம், ஜூன் 3: சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி கடந்த 25ம்தேதி தொடங்கி 9 நாட்கள் நடந்தது. இந்த முகாமில் எருமப்பட்டி, சேந்தமங்கலம் ஒன்றியங்களில் உள்ள 51 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 202 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 55 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, உத்தரவு நகல் வழங்கும் நிகழ்ச்சி, ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் கலந்துகொண்டு, 49 பேருக்கு பட்டா மாறுதல், 6 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் 55 பேருக்கு உத்தரவு நகல்களை வழங்கினார். முன்னதாக 51 வருவாய் கிராமங்களில் வருவாய் தீர்வாயம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் கணக்கு தணிக்கை அலுவலர் ராஜேஷ் கண்ணா, சமூக நலத்திட்ட தாசில்தார் சுந்தரவல்லி, வட்டவழங்கல் அலுவலர் முத்துக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் இந்திராணி, வேளாண் அலுவலர் சந்திரசேகர், துணை தாசில்தார் பாரதிராஜா, வருவாய் ஆய்வாளர் தங்கராசு, மணிமேகலை, வட்ட நிலஅளவை ஆய்வாளர் கனகராஜ், குறுவட்ட ஆய்வாளர் முருகேசன், விஏஓ.,க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Jamabandi ,Chentamangalam taluka ,
× RELATED அணைக்கட்டு தாலுகாவில் 2ம் நாள்...