×

டாடா நிறுவனம் ஒப்பந்தம்: 2,100 கோடியில் சென்னை எல்லைச்சாலை திட்டம்

சென்னை: சென்னை எல்லைச்  சாலையில் முதல் கட்டமாக ரூ.2,100 கோடியில் எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை 6 வழி வட்டச்சாலை அமைக்கும் பணியை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. சென்னையை ஒட்டிய பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, புறநகர் பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் வராமலேயே செல்ல சென்னை எல்லைச் சாலையை அமைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இச்சாலை, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் இருந்து எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் வகையில் 133 கிமீ தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக ரூ.2,100 கோடியில் எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை ஆந்திர மாநில நெடுஞ்சாலை ஏஎச்45 வழியாக 6 வழி வட்டச்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. இச்சாலையின் மூலமாக சென்னை வெளிப்புற வட்டச்சாலையுடன் வடக்கு துறைமுக அணுகு சாலை இணைக்கப்படும். எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரையிலான இந்த சாலையின் மொத்த நீளம் 25.38 கிமீ தூரமாகும். இதில், பக்கிங்காம் கால்வாய் மீது 1.4 கிமீ நீளத்திற்கு ஒரு பாலம் உட்பட 8 பெரிய பாலங்களும், 8 சிறிய பாலங்களும், 2 சாலை மேம்பாலங்களும், 7 சுரங்கவழிச் சாலைகளும், 1 மாற்றுச்சாலையும் அமைக்கப்பட உள்ளது. மேலும், 29.38 கிமீ தூரத்திற்கு வடிகால்களும், 41.88 கிமீ தூரத்திற்கு தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக டாடா நிறுவனம் கூறி உள்ளது. …

The post டாடா நிறுவனம் ஒப்பந்தம்: 2,100 கோடியில் சென்னை எல்லைச்சாலை திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tata Company ,Chennai ,Nilur Port ,Dachur ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...