×

கபரமத்தி அருகே புன்னம் காலனி மதுரை வீரன் கோயில் திருவிழா

க.பரமத்தி, ஜூன் 3: க.பரமத்தி அருகே புன்னம் காலனி மதுரைவீரன் கோயில் திருவிழாவில் சுற்று பகுதியினர் பங்கேற்று வழிபாடு செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி காலனி தெருவில் மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் கொண்டு வந்தனர். இரவு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து முக்கிய நிகழ்வான கிடா வெட்டு நிகழ்ச்சியும் தொடர்ந்து பெரும்பூஜை வழிபாடு நடத்தப்பட்டு பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Punnam Colony Madurai Veeran Temple Festival ,Kabaramathi ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் காற்றுடன்...