காரைக்குடியில் தினாவள்ளி மஹால் திறப்பு

காரைக்குடி: காரைக்குடி செஞ்சை ஊரணி அருகில் அமைந்துள்ள தினாவள்ளி மஹால் திறப்பு விழா நடந்தது. சிங்கப்பூர் பாராளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் டாக்டர் தினகரன் பேசினார். ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மண்டபத்தை திறந்து வைத்து பேசுகையில், அறக்கட்டளைக்கு என மிகபெரிய சொத்தை வழங்கிய சிங்கப்பூர் முன்னாள் எம்.பி. டாக்டர் தினகரன், அவரது மனைவி வள்ளியம்மை ஆகியோரின் சேவை பாராட்டக் கூடியது. குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பலேயே இந்த சாதனையை செய்ய முடிந்துள்ளது. கலைஞர் தான் வாழ்ந்த வீட்டை தனக்கு பிறகு அரசு மருத்துவமனைக்கு ஒப்படைத்து போல, தனக்கு பிறகு வரும் சந்ததியினரும் இச்சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதற்காக மண்டபத்தின் வாசலில் கல்வெட்டில் அதனை எழுதி வைத்துள்ளனர் என்றார்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தென்னவன், அகில இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் திருவாசகம், தொழிலதிபர் படிக்காசு, முன்னாள் எம்எல்ஏ சுப துரைராஜ், நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், தொழிலதிபர் எஸ்எல்என்எஸ் திருநாவுக்கரசு செட்டியார், கம்பன் அறநிலை தலைவர் சத்தி திருநாவுக்கரசு செட்டியார், தொழிலதிபர் கேஆர்எஸ்பி கண்ணன், வள்ளியம்மை தினகரன், திருநெல்வேலி மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளர் எல்.ராமசாமி, மணிமேகலை, ரமேஷ்குமார், செண்பகவள்ளி, ராமுராமசாமி, அலமேலு, தொழில்வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி, நகர்மன்ற உறுப்பினர் ஹரிதாஸ்துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: