×

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது: டி.ஜெ.கோவிந்தராசன் எம்எல்ஏ அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பு குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (31ம் தேதி) மாலை 4 மணியளவில் பெரியபாளையம், பஜார் வீதி, எல்.கே.எஸ். திருமண மண்டபத்தில் நடக்கிறது. தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி வரவேற்கிறார்.

மாநில நிர்வாகிகள் கும்மிடிப்பூண்டி கி.வேணு, க.சுந்தரம், இ.ஏ.பி.சிவாஜி, சி.எச்.சேகர், டி.வி.தமிழன் இளங்கோவன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மு.பகலவன், கேவிஜி.உமாமகேஸ்வரி, மு.கதிரவன், டாக்டர் பரிமளம், ஏ.நிலவழகன், மீ.வீ.கோதண்டன், எம்.எல்.ரவி, ப.வெங்கடாஜலபதி, வெ.அன்புவாணன், கே.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.சுப்பிரமணி, பா.செ.குணசேகரன், ஏ.வி.ராமமூர்த்தி, அபிராமி குமரவேல் முன்னிலை வகிக்கின்றனர்.கூட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதால், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.


Tags : Tiruvallur ,East ,District ,DMK Executive Committee ,DJ Govindarajan ,MLA ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...