×

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்

சங்ககிரி, மே 27:  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இது காணொலி வாயிலாக சங்ககிரி கத்தேரி ஊராட்சி, தேவண்ணக்கவுண்டனூர், மோரூர் மேற்கு ஊராட்சி, சின்னாக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில், சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) தேசிங்கு ராஜன் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள், வரப்பு பயிர், உளுந்து காய்கறி விதைகள், மண்புழு உரங்கள் மற்றும் மானிய விலையில் பேட்டரி தெளிப்பான், கை தெளிப்பான் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்பட்டது. இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்செல்வி சண்முகம், கலா மோகன்ராஜ், சாரதா பழனியப்பன், துணை தலைவர் கவிதாமேரி தர்மராஜ், வேளாண்மை உதவி அலுவலர் முரளிதரன், சீனிவாசன், தோட்டக்கலை உதவி அலுவலர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




Tags : Makudanjavadi ,
× RELATED பேஸ்புக் விளம்பரம் மூலம் ஐடி கம்பெனி...