×

மலையோர பகுதிகளில் கனமழை: பேச்சிப்பாறை அணையில் மறுகால் திறக்க வாய்ப்பு; பெருஞ்சாணி நீர்மட்டமும் ஒரே நாளில் 3 அடி உயர்வு

நாகர்கோவில், மே 20: குமரி மாவட்டத்தில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை வரை சாரல் மழை பெய்தவண்ணம் இருந்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 69.4 மி.மீ மழை பெய்திருந்தது. காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.78 அடியாக இருந்தது. அணைக்கு 1432 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணை, 45 அடியை எட்டும் தருவாயில்  மறுகால்வழியாக தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 46.05 அடியாக உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். அணைக்கு 1181 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் நீர்மட்டம் 10.89 அடியாக இருந்தது. அணைக்கு 101 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 10.99 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 90 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 17.90 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது.

மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 18.86 அடியாகும். தொடர் மழை காரணமாக குழித்துறை தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குழித்துறையில் உள்ள சப்பாத்து பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. திற்பரப்பு அருவியிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது.

மழையளவு (மி.மீ)
பேச்சிப்பாறை:     33.6
பெருஞ்சாணி :    69.4
சிற்றார்-1:     32.6
சிற்றார்- 2:     69.2
மாம்பழத்துறையாறு: 49
புத்தன் அணை:     68.6
நாகர்கோவில்:     43.0
இரணியல்:     23
குளச்சல்:      9
சுருளோடு:     51.6
கன்னிமார் :     7.4
பூதப்பாண்டி:    27.2
மைலாடி:28.     4
கொட்டாரம்:    10.2
நிலப்பாறை:     3.2
பாலமோார்:    57.6
அடையாமடை:    37
ஆனை கிடங்கு:     47
திற்பரப்பு:    31
குருந்தன்கோடு:     40.2
ஆரல்வாய்மொழி :    18
கோழிப்போர்விளை: 40
முள்ளங்கினாவிளை: 38.2

Tags : Pechipparai dam ,Perunchani ,
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் குமரி சிற்றாறில் 4 செ.மீ. மழைப்பதிவு..!!