×

சங்கரா பல்கலையில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம்:ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் ஜெயந்தி விழா ஏனாத்தூர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர்நிலை (சங்கரா பல்கலைக்கழகம்) பல்கலைக்கழகத்தில் நடந்தது. காலை 7 மணிமுதல் 9 மணிவரை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரே கல்லாலான ஆதி சங்கரரின் 70 அடி உயர சிலைக்கு அபிஷேகமும் சிறப்பு ஆராதனையும், தொடர்ந்து மங்கள ஆரத்தியும் நடந்தது.

பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ்.வி. ராகவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் சுதா சேஷய்யன்  கலந்துகொண்டு “அத்வைதம் மற்றும் வசுதைவ குடும்பகம்” பற்றி பேசினார். மதுரை அபங்கம் கிருஷ்ணன் குழுவினரின் நாமசங்கீர்தனம் நடந்தது.அப்போது, பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் பாரம்பரிய கோலாட்டம் மற்றும் கும்மி நடனமாடினர். பினனர் ஆரத்தி காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவில் 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Adisankar Jayanti Festival ,Sankara University ,
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு