கள்ளக்காதலியால் தகராறு நண்பரை கொன்ற வாலிபர் கைது

அண்ணாநகர்: நெற்குன்றம் 14வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(50). ராமு (எ) ராமச்சந்திரன்(34). நண்பர்கள். ராமசந்திரனுக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்துவதாக கூறி, சுப்பிரமணியன், ராமச்சந்திரனிடம் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி நைசாக பேசியுள்ளார். இதில், சுப்பிரமணியனுக்கும் அவர் மீது கள்ளக்காதல் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் கடந்த 10ம் தேதி இரவு சுப்பிரமணியன்  வீட்டிற்கு சென்று மது அருந்த பைக்கில் அவரை நெற்குன்றம் செல்லியம்மன் கோயில் அருகே உள்ள காலி மைதானத்திற்கு அழைத்து சென்றார்.

அப்போது ஏற்பட்ட போதை தகராறில்,  ராமச்சந்திரன் சுப்பிரமணியை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.  இதில், படுகாயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில், சுப்பிரமணி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் ராமச்சந்திரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: