×

மாணவியை கடத்திய வாலிபர் மீண்டும் போக்சோவில் கைது

ஆட்டையாம்பட்டி மே 11: ஆட்டையாம்பட்டி அருகே சீரகாபாடியைச் சேர்ந்தவர் சீரங்கன் மகன் சின்ராஜ்(23). தறி தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்1 படித்து வரும் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடத்திச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆட்டையாம்பட்டி போலீசார் சின்ராஜ் மீது போக்சோ சட்டத்தன் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, ஜாமீனில் வந்த சின்ராஜ் மீண்டும் அதே மாணவியிடம் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை கூறி கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி மீண்டும் கடத்திச் சென்று விட்டார்.

இதுகுறித்து மாணவியின் தாய் ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து டிஎஸ்பி தையல்நாயகி உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் அம்சவல்லி மற்றும் போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, கொண்டலாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்ற சின்ராஜ் சீரகாபாடிக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நேற்று சீரகாபாடி மேம்பாலம் அருகே வந்த இருவரையும் போலீசார் பிடித்தனர். இதையடுத்து, இரண்டாவது முறையாக போக்சோ சட்டத்தின் கீழ் சின்ராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மீட்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்த போலீசார், அரசு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Pokcho ,
× RELATED விழுப்புரம் அருகே மாணவியை கூட்டு...