×

அரசு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி

தங்கவயல்: படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு தொழில் திறன் வளர்க்கும் நோக்கத்தில் அரசு முதல்நிலை கல்லூரியில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. தங்கவயலில் இயங்கி வரும் அரசு முதல்நிலை கல்லூரியில் டிரிம் அண்ட் டிரிம் தன்னார்வு தொண்டு அமைப்பின் ஒத்துழைப்பில், கம்பியூட்டர் சயின்ஸ் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி முகாம் நடத்தியது. முகாமை கல்லூரி முதல்வர் எம்.கிருஷ்ணமூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். ஒவ்வொரு மாணவ, மாணவிகளையும் மேடைக்கு அழைத்து அவர்களின் எதிர்கால திட்டம் என்ன? என்று கருத்து கேட்டனர். மாணவர்கள் தங்கள் உள்ள வேட்கையை தைரியமாக வெளிப்படுத்தினர். அதன் பின் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டவர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றினர். சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது….

The post அரசு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Thangavyal ,
× RELATED பங்காருபேட்டையில் வியாபாரியிடம் 2.5...