முனையடுவநாயனார் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

தேவதானப்பட்டி, மே 10: தேவதானப்பட்டி அருகே, சில்வார்பட்டியில் உள்ள முனையடுவநாயனார் கோயிலில் காசிவிஸ்வநாதர் விசாலாட்சி திருக்கல்யாண நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் விநாயகர், முருகன், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவநாயனார், நடராஜர், மாணிக்கவாசகர், சிவகாமி அம்மாள், சண்டிகேஸ்வரர், நால்வர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் முகூர்த்த நேரத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்று காசிவிஸ்வநாதர், விசாலாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்பட்டது.

Related Stories: