×

கொட்டரை கிராமத்தில் மருதையாறு சேற்றில் சிக்கிய பசு மாடு

பெரம்பலூர்,மே 10: கொட்டரை கிராமத்தில் மருதையாறு சேற்றில் சிக்கிய பசு மாட்டை 1 மணி நேரம் போராடி கிராம வாலிபர்கள் மீட்டனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்டது கொட்டரை கிராமம். இங்கு நேற்று சுமார் 3 மணியளவில் கொட்டரை கிராமத்தையொட்டி செல்லுகின்ற மருதையாற்றில் அதே ஊரைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரது பசுமாடு சேற்றில் சிக்கிக் கொண்டது. 3 மணிமுதல் 5 மணி வரை தன்னாலும் சேற்றில் இறங்கிக் காப்பாற்ற முடியாமல் தவித்தனர். உதவிக்காக ஊரை சேர்ந்த யாருக்கும் தகவல் தெரிவிக்கவும் முடியாமல், மாட்டை விட்டுவிட் டு வீடுசெல்லவும் மனசில்லாமல் பழனியம்மாள் பசுமாட்டை நினைத்து சேற்றின் கரையிலேயே 2 மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டு கண்ணீர் வடித்துள்ளார். மாட்டை விட்டுவிட்டு வீட்டுக்கும் வராமல் அங்கேயே பழனியம்மாள் இருக்கும் தகவல் கிடைத்த கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் கனகராஜ் என்பவருக்குத் தெரியவந்தது. தகவறிந்தவுடன் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கமலஹாசனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பொக்லைன் இயந்திரங்கள் அனுப்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமுருகன் மற்றும் கிராம இளைஞர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளைஞர்கள் கனகராஜ், லட்சுமணன், தமிழ்செல்வன் மற்றும் இளைஞர்கள் ஒன்று கூடி பசுமாட்டை பொக்லைன் இயந்திர உதவியுடன் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

Tags : Maruthayaru ,Kottarai ,
× RELATED ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்