×

திருவேற்காட்டில் அதிகாரிகள் அதிரடி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ. 22 ஆயிரம் அபராதம்

பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் சுகாதாரத்துறை சார்பில் கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தப்படுகிறது என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நகர்மன்ற தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி, ஆணையர் ரமேஷ் அறிவுறுத்தலின்பேரில் திருவேற்காடு பேருந்து நிலையம், சன்னதி தெரு, அயனம்பாக்கம், நூம்பல், சிவன் கோயில் தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் திருவேற்காடு நகராட்சி சுகாதார துறை ஆய்வாளர் ஆல்பர்ட் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது 175 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி  வந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ. 22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதே போன்று கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன் படுத்தினால் அபராதம் விதிப்பதுடன் கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

Tags : Thiruverkot ,
× RELATED திருவேற்காட்டில் கலைநிகழ்ச்சிகள்...