×

திருச்சியில் நீதிபதிகள் தங்கும் விருந்தினர் மாளிகை ஐகோர்ட் தலைமை நீதிபதி திறந்து வைத்தார்

திருச்சி, ஏப். 25: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா மற்றும் திருச்சியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் தங்குவதற்கான விருந்தினர் மாளிகை ஆகியவற்றை திறந்து வைப்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் பாரதிதாசன், சுப்பிரமணியன் ஆகியோர் வந்தனர். ஏர்போர்ட்டில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபு, வடக்கு மாநகர துணை கமிஷனர் சக்திவேல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து காரில் புறப்பட்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி சென்று புதிய நீதிமன்றத்தை திறந்து வைத்தனர்.

அதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு திருச்சிக்கு மாலை வந்தனர். இங்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.2.13 கோடியில் புதிதாக கட்டப்பட்ட நீதிபதிகள் தங்கும் விருந்தினர் மாளிகையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி திறந்து வைத்தார். அவருடன் நீதிபதிகள் பாரதிதாசன், சுப்பிரமணியன் மற்றும் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபு, அமைச்சர்கள் ரகுபதி, கே.என்.நேரு, மகேஷ்பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகர கமிஷனர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இரவு விமானம் மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் சென்னை சென்றனர்.

Tags : Tirchi ,Guest House ,iCord ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...