×

கேஜி பிசியோதெரபி கல்லூரி சார்பில் தேசிய அளவிலான பிசியோதெரபி கல்லூரிகள் சந்திப்பு நிகழ்ச்சி

அன்னூர், ஏப்.23:  கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள கேஜி ஐஎஸ்எல் மைதானத்தில் கேஜி பிசியோதெரபி கல்லூரி சார்பில் கேஜி நெக்சஸ் 2022 என்னும் 2வது தேசிய அளவிலான பிசியோதெரபி கல்லூரிகள் சந்திப்பு நடந்தது. விழாவில் கேஜி குழுமங்களின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமை வகித்தார். கேஜி ஐஎஸ்எல் நிர்வாக இயக்குனர் அசோக் பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். விளையாட்டு போட்டிகளை சுடர் ஏற்றி துவக்கி வைத்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 47 பிசியோதெரபி கல்லூரிகளில் இருந்து 2500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி, மருத்துவ முன்னேற்றம் குறித்த கருத்தரங்கு ஆகியவை துவங்கின. 3 நாட்கள் நடைபெறும் விழா நாளை வரை (24ம் தேதி)  நடக்கிறது.
 
போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு ஒட்டுமொத்த கோப்பை பரிசாக வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் கோவை மாநகர துணை போலீஸ் கமிஷனர் செல்வகுமார் மற்றும் செந்தில்குமார், அஞ்சலி பிரதீப் குமார்,  கேஜி பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்டர் மனோஜ் ஆபிரகாம் மற்றும் தலை சிறந்த பிசியோதெரபி மருத்துவர்கள் பங்கேற்றனர்.

Tags : KG Physiotherapy College ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை