7 ஊராட்சிகளில் தண்ணீர் பந்தல் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: மக்களின் தாகத்தை தணிப்பதற்காக, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் 7 ஊராட்சிகளில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். கோடை காலத்தை முன்னிட்டு மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மண்ணிவாக்கம், வண்டலூர், கீரப்பாக்கம், குமிழி, கல்வாய், பெருமாட்டுநல்லூர், ஊரப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வி.எஸ்.ஆராமுதன் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜே.வி.எஸ்.ரங்கநாதன், எம்.டி.சண்முகம், ஓட்டேரி குணா, கே.எஸ்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கஜலட்சுமி சண்முகம், வண்டலூர் முத்தமிழ்செல்வி விஜயராஜ், ஊரப்பாக்கம் பவானி கார்த்தி ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், செங்கல்பட்டு எம்எல்ஏவுமான வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரி, லெமன் ஜூஸ், ரஸ்னா ஆகியவை வழங்கினார்.இதில், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான்தினகரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏ.வி.எம்.இளங்கோவன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஆ.கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: