×

கோவில்பாளையம் கேஎம்சிஎச் மருத்துவ மையத்தில் 24ம் தேதி இலவச மருத்துவ முகாம்

கோவை, ஏப்.21: கோவை  கோவில்பாளையம் சக்தி சாலையில் அமைந்துள்ள கேஎம்சிஎச் கோவில்பாளையம்  மருத்துவ மையத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் வரும்  24ம் தேதி (ஞாயிற்றுகிழமை) காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை  நடக்கிறது. கோவில்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ள இம்முகாமில், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம் (மூளை மற்றும் தண்டுவடம்), நுரையீரல் மருத்துவம், எலும்புமுறிவு மற்றும் மூட்டு மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் இலவச ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

மேலும் இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமில் இலவச சர்க்கரை பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலசோனைகள் இலவசமாக அளிக்கப்படும். சிடி  ஸ்கேன் 50 சதவீதம் சலுகை கட்டணத்திலும், சிகிச்சைகள் மற்றும் இதர பரிசோதனைகள் 25 சதவீத சலுகை கடடணத்திலும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 87541 87551 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கேஎம்சிஎச் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : KMCH Medical Center ,Kovilpalayam ,
× RELATED கோவில்பாளையம் அருகே 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்; ஒருவர் கைது