×

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ஆய்வு மாணவப்பருவத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

பேராவூரணி, ஏப்,21: சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் மாணவர்களிடம் மாணவப்பருவத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மனோகராவில் கட்டப்பட்டு வரும் புதிய பயிற்சி கூட கட்டிடத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

மனோகரா அருகே எஸ்ஆர் பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்த நிழற்குடையையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பயிரிடப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தை பார்வையிட்டார். பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அங்கன்வாடியில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக வழங்கப்படுகிறதா என சமையல் கூடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிக்கு சென்று மாணவர்களின் கல்வித்தரம் குறித்து மாணவர்களிடம் கேள்வி கேட்டும், வாசிக்கச்சொல்லியும் ஆய்வு செய்தவர், படிப்பு மட்டுமே வாழ்க்கையின் உயரத்திற்கு உங்களை கொண்டு செல்லும் எனவே மாணவப்பருவத்தில் படிப்பில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வளர்ச்சிப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பட்டுக்கோட்டை ஆர்டிஓ பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Sethupavasathiram Union ,
× RELATED சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில்...