டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

ஊட்டி, ஏப். 20:  டாக்டர் அம்பேத்காரின் பிறந்த நாளையொட்டி ஊட்டி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை சார்பில் பேச்சுப் போட்டி நடந்தது. டாக்டர்  அம்பேத்காரின் பிறந்த நாளையொட்டி ஊட்டி அரசு கலைக்கல்லூரி  தமிழ்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஆகியவை சார்பில் பேச்சுப்போட்டி நடந்தது. போட்டியினை கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி  தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

 விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர்  எபினேசர், உதவி பேராசிரியர் பரமேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில்,  முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் சுதிர் முதல் இடம் பிடித்தார்.  எமரால்டு ஹைட்ஸ் கல்லூரி முதலாம் ஆண்டு வணிகவியல் மாணவி சவுந்தர்யா  இரண்டாம் இடம் பிடித்தார்.

குன்னூர் பிராவிடனஸ் கல்லூரி மாணவி கீர்த்தனா  மூன்றாம் இடம் பிடித்தார். முதல் இடம் பெற்றவருக்கு ரூ.5 ஆயிரமும்,  இரண்டாம் இடம் பெற்றவருக்கு ரூ.3 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த  மாணவருக்கு ரூ.2 ஆயிரமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

Related Stories: