×

திருமக்கோட்டையில் 86 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கல்

மன்னார்குடி, ஏப். 20: மாற்றுத் திறனாளிகளின் மறு வாழ்விற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறையில் சார்பில் செயல் படுத்தப் படும் நலத்திட்ட உதவி களை பெறுவதில் மாற்று திறனாளி களுக்கு ஏற்படும் பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அந்தந்த ஒன்றியங்களில் சிறப்பு முகாம்கள் நடை பெற்று வருகிறது. அந்த வகையில், திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, டாக்டர் கலைஞர் மக்கள் மேம்பாட்டு சேவை மையம் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தேவதாஸ் தலைமையில் திருமக்கோட்டையில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் புவனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கவுன்சிலர் கலைவாணி மோகன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில், 86 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டை கள் வழங்கப்பட்டன. 14 நபர்களுக்கு டாக்டர்கள் பாரதிராஜா, பிரதீபா ஆகி யோரால் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சான்றுகள் வழங்கப் பட்டன. மேலும், உதவி உபகாரணகள் கோரி வரப்பட்ட 16 மனுக்கள் மீது நடவடிக் கைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. அதில் இரண்டு நபர்களுக்கு வீல் சேர்கள் உடனடியாக வழங்கப்பட்டது. முகாமில், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், கலைஞர் இலக்கிய பகுத்தறிவு பாசறை ஒன்றிய அமைப்பாளர் ரத்தினவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் டாக்டர் கலைஞர் மக்கள் மேம்பாட்டு சேவை மைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கோவிந்த ராஜ் நன்றி கூறினார்.

Tags : Thirumakottai ,
× RELATED திருவாரூர் திருமக்கோட்டை அருகே...