×

கோவை-கரூர் பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கோவை, ஏப்.19:  கோவை-கரூர் இடையே ஆறு வழி பசுமைவழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மண்டல விவசாயிகள் கூட்டமைப்பினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை முதல் கரூர் வரை ஆறு வழி பசுமைவழி சாலை அமைத்திட ஒன்றிய மற்றும் மாநில அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, அவ்வழியில் உள்ள பல்வேறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நிலங்கள் கையெகப்படுத்தப்பட உள்ளன.

இதனால், சுமார் 3000 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் எனவும், ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மண்டல விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கோவை எம்பி பி.ஆர். நடராஜன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Coimbatore- ,Karur Greenway ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை