×

இளையான்குடி பகுதியில் பறிமுதல் மணலை காணவில்லை: நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு

இளையான்குடி, ஏப்.14:  இளையான்குடி அருகே சாலைகிராமத்தை சேர்ந்த ராதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2019,20,21 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட திருட்டு மணல் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதில் இளையாங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 38 யூனிட் மணலும், சாலைகிராமம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 12 யூனிட் மணல்களும் என மொத்தம் 50 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட மணலை காணவில்லை என இளையான்குடி காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இளையான்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டதில் அரசு அலுவலக வளாகத்தில் இருந்த பறிமுதல் செய்யப்பட்ட 50 யூனிட் மணல் காணாமல் போனது எப்படி? அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய இளையான்குடி காவல் நிலையத்திற்கு, நீதிபதி சுனில் ராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு அலுவலக வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மணலைத் திருடிச் சென்ற சம்பவம் இளையான்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ilayankudi ,
× RELATED இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை