×

காந்திபேட்டையில் உலா வரும் காட்டுமாடுகள்

ஊட்டி, ஏப்.14: ஊட்டி - மஞ்சூர் சாலையில் லவ்டேல் அருகே காந்திபேட்டை கிராமம் உள்ளது. இப்பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டங்கள், மலைகாய்கறி விவசாய நிலங்கள் உள்ளிட்டவை உள்ளன. மேலும், காந்திபேட்டை, டி.எப்.எல்., பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனங்களில் பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் காட்டுமாடு, கரடி, காட்டுபன்றி போன்ற வன விலங்குகள் இரவு நேரங்களில் கிராம பகுதிகளுக்குள் வரும்.

அவ்வாறு வரும் விலங்குகள் கிராம பகுதிகளுக்குள்ளும் புகுந்து விடுகின்றன. அங்கு பயிரிடப்பட்டிருக்கும் காய்கறி பயிர்களையும் நாசப்படுத்தி விடுகின்றன. சில சமயங்களில் வேலைக்கு செல்பவர்களையும் துரத்தி விடும். இந்நிலையில், காந்திப்பேட்டை, டி.எப்.எல்., பகுதிகளில் சமீபகாலமாக கூட்டம் கூட்டமாக காட்டுமாடுகள் உலா வருகின்றன. இவை அப்பகுதியில் பயிாிடப்பட்டுள்ள காய்கறி தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகின்றன.

அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை சில சமயங்களில் விரட்டுகின்றன. மேலும், இரவு நேரங்களில் ஊட்டி - மஞ்சூர் சாலையில் உலா வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

Tags : Gandhipet ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்