×

குந்தாவில் ஏப்.18ல் தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல்

ஊட்டி, ஏப்.13: குந்தா புனல் மின் உற்பத்தி வட்டம், குந்தாவில் ஐடிஐ, தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் வரும் 18 மற்றும் 19ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து குந்தா புனல் மின் உற்பத்தி வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குந்தா புனல் மின் உற்பத்தி வட்டத்திற்குட்பட்ட அலுவலகங்கில் ஒரு வருட ஐடிஐ, தொழில் பழகுநர் பயிற்சிக்கு வயர்மேன்கள், எலக்ட்ரீசியன்கள், பிட்டர், டர்னர், வெல்டர், கணினி இயக்குபவர் என 30 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவர்களுக்கான நேர்காணல் குந்தா புனல் மின் உற்பத்தி வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், மஞ்சூர், நீலகிரி மாவட்டத்தில் வரும் 18 மற்றும் 19ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது. எனவே, தகுதியுள்ள நபர்கள் கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி சான்றிதழ், ஆதார் அட்டை, மற்றும் வங்கி புத்தகம் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல் ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

மேலும், ஏற்கனவே தொழிற்பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் நேர்காணலுக்கு ஆஜராக தேவையில்லை. இந்த நேர்காணலுக்கு அவரவர் தமது சொந்த பொறுப்பில் பங்கேற்க வேண்டும். இந்த நேர்காணலில் தேர்ச்சி பெறும் தொழிற்பழகுநருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.8050 வீதம் உதவி தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags : Kunda ,
× RELATED குந்தா சுற்று வட்டார பகுதியில்...