×

மசினகுடி வனத்தில் பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்கள்

ஊட்டி, ஏப்.13:  முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனப்பகுதிகளில் கொன்றை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாத துவக்கம் வரை பருவமழை பெய்தது. அதன்பின், உறைப்பனி பொழிவு துவங்கியது. பனிப்பொழிவு மற்றும் பகல் ேநரங்களில் நிலவிய வெயில் காரணமாக, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் பசுமை இழந்து காணப்படுகிறது. குறிப்பாக கூடலூர், முதுமலை, மசினகுடி, மாவனல்லா வனப்பகுதிகளில் உள்ள புற்கள், செடி, கொடிகள் கருகி காணப்படுகிறது. இதேபோல், மரங்களும் இலை உதிர்ந்து காணப்படுகிறது. இதனால், வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

சமவெளி பகுதியில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் நீலகிரிக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், வனப்பகுதிகள் பசுமை இழந்து காணப்படுவதால் வனவிலங்குகளை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இந்நிலையில், கோடை காலத்தில் மலரும் கொன்றை மலர்கள் கூடலூர், முதுமலை, மசினகுடி வனப்பகுதிகள் சாலையோரங்களில் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில்,``சமவெளி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், வெப்பத்தை சமாளிக்க முடியாமல் நீலகிரிக்கு வருகிறோம். ஆனால், முதுமலை புலிகள் காப்பக பகுதிகளிலும் வறட்சி அதிகமாக உள்ளதை உணர முடிகிறது. செடி, கொடிகள் காய்ந்து பசுமை இல்லாத வனமாக காணப்படுகிறது. இதனால், வனவிலங்குகளை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்து உள்ளோம்.இருப்பினும் கூடலூர், முதுமலையில் பசுமை இழந்து காணப்படும் வனத்தில் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கி காண்போரை ரசிக்க வைக்கிறது’’ என்றனர்.

Tags : Machinagudi forest ,
× RELATED மசினகுடி வனப்பகுதியில் வனத்துறையினர்...