×

அவிநாசி பேரூராட்சி மன்றக்கூட்டம்

அவிநாசி,ஏப்.12: அவிநாசி பேரூராட்சி மன்றக்கூட்டம் நேற்று பேரூராட்சி மன்றத்தலைவர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. செயல்அலுவலர் இந்துமதி, துணைத்தலைவர்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் சிவபிரகாஷ், கவிதா, தங்கவேல், சரவணக்குமார், சசிகலா, கருணாம்பாள், பத்மாவதி, தேவி, முருகநாதன், சாந்தி, கார்த்திகேயன், சித்ரா, பருக்கத்துல்லா, கோபாலகிருஷ்ணன், ரமணி, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரூராட்சி மன்றகூட்டம் தொடங்கியவுடன், சொத்துவரி உயர்வைக் கண்டித்து, கவிதா,தேவி,பத்மாவதி, சாந்தி, சித்ரா, தேவி உள்ளிட்ட 6 கவுன்சிலர்கள்  வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில், சொத்துவரி உயர்வு குறித்து கவுன்சிலர்கள் விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:

ரமணி: சமுதாயக்கூடத்தில், டைனிங் ஹால் அமைக்க வேண்டும். மேலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். போர்வெல்தண்ணீர் பொதுக்குழாயை அனைத்து வார்டுகளிலும் கூடுதலாக அமைக்க வேண்டும்.

முருகநாதன்: பேரூராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் இடங்களை பாதுகாக்க வேண்டும். தனியார் இதை ஆக்கிரமித்து உள்ளனர்.  காமராஜ் வீதியில் உள்ள ரிசர்வ் சைட் இடத்தை அளவீடு செய்து, அந்த இடத்தை பேரூராட்சி
நிர்வாகத்துக்கு முழுஉரிமையாக்க வேண்டும். பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் ஓவ்வொரு வீடுகளிலும் உள்ள ஏர் பைப்களில் கொசுவலை பொருத்த வேண்டும்.

கார்த்திகேயன்: சங்கமாங்குளம் வீதியில் புதிய மின் கம்பங்களை அமைக்கவேண் டும், ஏரிமேடு பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பேரூராட்சியின் வருமானத்தை அதிகரிக்க, சந்தைப்பேட்டையில், வனிக வளாக கடைகளை அமைத்து, பேரூராட்சியின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இறந்த உறவினர்களின் பிணத்தை வைத்துக்கொண்டு அடக்கம் செய்வதற்காக டாக்டரிடம் இறப்புச்சான்றிதழ் பெற, டாக்டர்களை சந்திக்க, அலையவேண்டியதாக உள்ளது. பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதை எளிமையாக்க வேண்டும்.

கருணாம்பாள்: 8வது வார்டு வள்ளுவர்வீதி,ஸ்ரீ ராம்நகர் பகுதியில் மின்கம்பங்கள் சாலையின் நடுவே உள்ளது. இதை சாலையின் ஓரத்தில் மாற்றி அமைக்கவேண்டும்.

பருக்கத்துல்லா: முஸ்லீம் மக்களுக்கான மயானம் நாயக்கன்தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மயானத்துக்கு இன்றுவரை மின்விளக்குவசதி, குடிநீர் வசதி இல்லை. எனவே, முஸ்லீம் மக்களுக்கான மயானத்துக்குமின்விளக்குவசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

தலைவர் தனலட்சுமி: கூட்டத்தில், 15 மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு குறித்து கவுன்சிலர்கள் விவாதமும் நடைபெற்றது. குடிநீர், பொதுசுகாதரம், பொதுக்குழாய், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பாரபட்சம் இல்லாமல், அனைத்து வார்டுகளுக்கும் பணிகள் நிறைவேற்றப்படும். என்றார்

Tags : Avinashi Municipal Council ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை