×

ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா ெஹத்தையம்மன் அலங்காரத்தில் தேர்பவனிபடுகர் இன மக்கள் ஆடல்,பாடலுடன் கொண்டாட்டம்

ஊட்டி,ஏப்.12:  ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் படுகர் இன மக்களின் சார்பில் ஹெத்தையம்மன் அலங்காரத்தில் தேர்பவனி நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.படுகர் கலச்சார நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக ஊட்டி மாரியம்மன் கோயில் விளங்கி வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.

ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாதம் நீடிக்கும் இத்திருவிழாவின் போது, ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்த மக்களும் தங்களது பாரம்பரிய முறைப்படி விழாக்களை நடத்துவர். ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் திருவீதி உலா நடக்கும். இதில், நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் சார்பில் நடத்தப்படும் தேர்பவனி விழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கணபதி ஹோமம்,பூச்சொரிதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. நாள்தோறும் ஆதிபராசக்தி,துர்க்கை, காமாட்சியம்மன்,ராஜராஜேஷ்வரி, கருமாரியம்மன், சிக்கம்மன், மாளிகை புறத்து அம்மன் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் மாரியம்மனின் தேர்பவனி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நீலகிாி மாவட்டத்தில் வசிக்க கூடிய படுகர் இன மக்களின் சார்பில் நேற்று தேர்பவனி  நடந்தது. இதில் காமதேனு வாகனத்தில் ஹெத்தையம்மன் அலங்காரத்தில் அம்மன் பவனி வந்தார். மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். விழாவினை முன்னிட்டு படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் ஊர்வலம் வரும் 19ம் தேதியன்று நடக்கிறது.

Tags : Ooty Mariamman Temple Festival ,Hettaiyamman ,
× RELATED கோத்தகிரியில் ஹெத்தையம்மன் கோவிலை...