×

கோவை ஆனைமலைஸ் ஷோரூமில் டொயோட்டா ‘நியூ கிளான்ஸா’ கார் அறிமுகம்

கோவை, ஏப். 9: கோவை சாயிபாபாகாலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டோ ஷோரூமில், ‘தி கூல் நியூ கிளான்ஸா’ கார் அறிமுக விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த கார், நகர்ப்புற பயணத்துக்கு ஏற்ற வகையில், டொயோட்டா நிறுவனத்தின் அதிநவீன காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடியது. பெட்ரோலில் இயங்கக்கூடியது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22 கி.மீ மைலேஜ் தருகிறது. மேனுவல் மாடல், இ, எஸ், ஜி, வி ஆகிய நான்கு வகைகளில் கிடைக்கிறது.

ஆட்டோமேட்டிக் மாடல் எஸ், ஜி, வி ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது. ரெட், கிரே, சில்வர், புளு, ஒயிட் என ஐந்து வண்ணங்களில் இந்த கார், கண்ணை கவருகிறது. அனைத்து மாடல்களிலும் 6 ஏர் பேக் வசதி உள்ளது. போதுமான அளவுக்கு லக்கேஜ் வசதியும் உள்ளது. மேம்படுத்தப்பட்ட அனைத்து அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. மேனுவல் மாடலின் ஆன் ரோடு விலை ரூ.7.50 லட்சத்தில் துவங்கி, ரூ.10.65 லட்சத்தில் நிறைவடைகிறது. ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.9.09 லட்சத்தில் துவங்கி, ரூ.11.23 லட்சத்தில் நிறைவடைகிறது. 5 வருடம் அல்லது 2.20 லட்சம் கி.மீ வாரண்டி வழங்கப்படுகிறது. ரூ.11 ஆயிரம் செலுத்தி புக்கிங் செய்தால், ஒரே மாதத்தில் இந்த அதிநவீன கார், டெலிவரி செய்யப்படுகிறது. வங்கிக்கடனுதவியும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது என ஷோரூம் நிர்வாகிகள் கூறினர்.

Tags : Toyota ,Cove Animalise Showroom ,
× RELATED பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மனைவியின் கார் திருட்டு