தொழிலாளர் வாரிய ஆலோசனைக்குழு உறுப்பினராக எம்எல்ஏ செல்வராஜ் தேர்வு

திருப்பூர், ஏப்.8: மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் தொழிலாளர் நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு செயல்படும். இதில் அரசு தரப்பு பிரதிநிதிகள் 5 பேர், வேலையளிப்போர் 6 பேர், தொழிலாளர் பிரதிநிதிகள் 6 பேர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் தேர்வு செய்யப்படுவர். இந்த வாரியம் மூன்றாண்டு காலத்திற்கு செயல்படும். இக்குழுவில், திருப்பூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து சென்னை தொழிலாளர் ஆணையர், எம்.எல்.ஏ.செல்வராஜிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தொழில் தகராறுகள் சட்டம் 1947-ன் கீழ் ஏற்படக்கூடிய தொழில் தகராறுகள் மற்றும் பிற தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான மாநில ஆலோசனை வாரியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி, தமிழ்நாடு மாநிலத் தொழிலாளர் ஆலோசனை வாரியத்தில் தாங்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளீர்கள். வாரியக் கூட்டம் நடைபெறும் விபரம் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: