×

மதுக்கரை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் திடீர் மரணம்

மதுக்கரை, ஏப்.8:  ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினியின் கணவரும், மதுக்கரை  கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமானவர் ராஜசேகரன் (49). இவர் நேற்றுமுன்தினம்  காலை மாரடைப்பால் இறந்து விட்டார்.
 இவர் ஒத்தக்கால்  மண்டபம் பேரூராட்சி பிரிமியர் நகர்பகுதி திமுக கிளை கழக நிர்வாகி, இளைஞரணி  நிர்வாகி, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி என பல பொறுப்புகளில் இருந்துள்ளார். சமீபத்தில்  நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல போட்டிகளுக்கு இடையே தனது  மனைவி பிரியதர்ஷினியை ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி தலைவராக ஆக்கியது  குறிப்பிடதக்கதாகும். இவர் இறந்த தகவல் அறிந்ததும்  திமுக மாவட்ட  பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், கிளை   செயலாளர்கள், தொண்டர்கள் கூட்டணி மற்றும் மாற்றுகட்சியினர் நேரில்  அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல்  ஒத்தக்கால் மண்டபம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : DMK ,Madukkarai ,East ,
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல்