×

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும்படி கடந்த 2015, 2017ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசு மீது  தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் உள்ளது.
 
கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர், ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். இதற்கு தமிழக அரசு காலஅவகாசம் கோரியது.  அதை ஏற்ற நீதிபதிகள், குடியிருப்புகளை காலி செய்ய இந்த கல்வியாண்டு வரை அவகாசம் வழங்கியும், வணிக கட்டிடங்கள் மீதான நடவடிக்கையை தொடரவும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் பெத்தேல் நகர் குடியிருப்போர் தரப்பில், 30 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் 30 ஆயிரம் மக்களை ஒரே இரவில் அப்புறப்படுத்தக் கூடாது எனவும், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக மாற்றி பட்டா வழங்குமாறும்,  மாற்று இடம் வழங்குமாறும்  அரசுக்கு உத்தரவிடவும் அந்த மனுக்களில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், பிரதான வழக்கில் தான் இடையீட்டு மனுதாரர்களாக இணைய முடியும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைய முடியாது. இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி  பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Inchambakkam Bethel ,ICC ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத...