×

காவேரிப்பட்டணம் அருகே கஞ்சா செடிகளை வளர்த்த 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஏப்.5:காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, குட்டப்பட்டியை சேர்ந்த வேலையன் (60) என்பவரது விவசாய தோட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, 12 கிலோ எடை கொண்ட ₹50 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா செடிகளை, போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். இதனை தொடர்ந்து வேலையன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பன்னிஅள்ளியை சேர்ந்த மாரிமுத்து (எ) ஜம்பு (60) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் குட்டப்பட்டி மேல்கொட்டாயை சேர்ந்த காந்தி என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வேலையன், மாரிமுத்து ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : Kaveripattanam ,
× RELATED தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம்