×

மாணவிகளுக்கு கலெக்டர் அறிவுரை பழையபாளையம் கிராமத்தில் கோடை நெல் சாகுபடி வயலில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

கொள்ளிடம், மார்ச் 31: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சில இடங்களில் மட்டும் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொள்ளிடம் வட்டாரத்தில் சுமார் 2,000 ஏக்கரில் மட்டுமே கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொள்ளிடம் அருகே பழையபாளையம் கிராமத்தில் கோடை நெல் சாகுபடியாக 25 ஏக்கர் நிலப்பரப்பில் பாரம்பரிய ரகமான குட்டை பொன்னி நெல் ரகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிர் மிகவும் செழிப்பாக வளர்ந்துள்ளது. இதனை கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் கூறுகையில் இப்பகுதியில் கோடை நெல் சாகுபடியாக பாரம்பரிய ரகமான குட்டை பொன்னி ரகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் சாகுபடி காலம் 90 நாட்களாகும்.இந்தப் நெற்பயிர் மிகவும் சிறப்பாக உள்ளது. எதிர்பார்த்ததைவிட நல்ல லாபம் தரக்கூடிய வகையில் இந்த நெல் சாகுபடி அமைந்துள்ளது என்றார்.


Tags : Palayapalayam ,
× RELATED சிஇஓ பிஏவாக பழையபாளையம் ...