×

தி.பூண்டியில் நவீன டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 30: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நவீன டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும் என்று எம்எல்ஏ மாரிமுத்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். திருத்துறைப்பூண்டியில் போட்டித் தேர்வர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், சிறுவர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளை உள்ளடக்கிய உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும் என்று எம்எல்ஏ மாரிமுத்து கடந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷாவை நேரில் சந்தித்து திருத்துறைப்பூண்டியில் நவீன டிஜிட்டல் நூலகம் அமைப்பது தொடர்பான கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.


Tags : T.Pundi. ,
× RELATED தி.பூண்டி பகுதியில் அனுமதியின்றி மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள்