×

பள்ளத்தூரில் 100% வரி வசூல்

காரைக்குடி  அருகே பள்ளத்தூர் பேரூராட்சியில் 2021-2022ம் ஆண்டுக்கான சொத்து வரி, சேவை  கட்டணம் ஆகியவை 100 சதவீதம் வசூல் செய்து முடிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி  தேர்தல் நடந்த நிலையிலும் சொத்து வரி ரூ.21 லட்சத்து 80 ஆயிரம், இதர சேவை  கட்டணம் ரூ. 2 லட்சத்து 67 என மொத்தம் 24 லட்சத்து 47 ஆயிரம் என 100  சதவீதம் வரி வசூல் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த  வருவாய் பிரிவு எழுத்தர் மதியழகன், வரி தண்டலர்கள் ஈஸ்வரன், ருத்ராபதி  மற்றும் பணியாளர்களை செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் பாராட்டினார்.

Tags : Pallathur ,
× RELATED கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி