×

சாதி பெயரை ெசால்லி திட்டியதாக காந்தலில் மக்கள் சாலை மறியல்

ஊட்டி, மார்ச் 26:  சாதி பெயரை ெசால்லி திட்டியதாக கூறி ஊட்டி காந்தல் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மூடிக்கிடந்த பொது கழிப்பிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பராமரிப்பு பணிகளை அங்குள்ள ஒரு மகளிர் குழுக்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த மகளிர் குழுவை சேர்ந்த பெண் ஒருவர், கழிப்பிடம் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளிடம் ரூ.50 வழங்க வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இலவச கழிப்பிடத்திற்கு பணம் தர முடியாது என கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மகளிர் குழுவை சேர்ந்த ஒரு பெண் தகாத வார்த்தைகளிலும், சாதி பெயரை சொல்லியும் அப்பகுதி மக்களை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காந்தல் - ஊட்டி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற ஊட்டி ஜி1 போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Kanthal ,Sally ,
× RELATED டெல்லிக்கே ராஜான்னாலும் எங்களுக்கு...