பரமத்திவேலூர் தாலுகாவில் காவிரியாற்றில் 21.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

பரமத்திவேலூர், மார்ச் 26: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில், பரமத்திவேலூர் தாலுகா பொன்மலர்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட காவிரி ஆற்றுப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர், ஆக்கிரமிப்பு செய்திருந்த 16 ஏக்கர் நிலத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் பொக்லைன் மூலம் அகற்றினர். இதேபோல், கொத்தமங்கலத்தில் காவிரியாற்று பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலத்தையும், பாலப்பட்டியை அடுத்துள்ள குமாரபாளையம் கிராமத்தில் வாய்க்கால் புறம்போக்கு என வகைப்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 75 சென்ட் நிலத்தையும் அதிகாரிகள் மீட்டனர்.

Related Stories: