×

மன்னார்குடியில் வங்கியாளர்கள் கூட்டம் வருடாந்திர கடன் திட்ட அறிக்கை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டார்

மன்னார்குடி, மார்ச் 26: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடை பெற்ற வட்டார அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் 2022-2023ம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டார்.பின்னர், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: திருவாரூர் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் வங்கி கிளைகள் மூலம் ரூ.5626 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு ரூ.4665.25 கோடியும், சிறு மற்றும் குறு கடன்களுக்கு ரூ.373.45 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.587.68 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும் நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.962 கோடி அதாவது 17 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கி திட்ட மதிப்பீட்டின்படி மாவட்டத்தில் வேளாண்மை, வேளாண்மை சார்ந்த துணை தொழில்கள் மற்றும் வேளாண்மை சாரா பிரிவுகளை வளப்படுத்த வேண்டும் என மாவட்ட மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, மூன்று மகளிர் சுய உதவிக்குழுவிற்கு தலா ரூ.10 லட் சம் வீதம் ரூ.30 லட்சத்திற்கான கடனுதவியும், தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான மானியத்துடன் கூடிய டிராக்டரையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) சிவக்குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பக்கிரிசாமி நன்றி கூறினார்.


Tags : Gayatri Krishnan ,Bankers Meeting ,Mannargudi ,
× RELATED மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு...