×

என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் குறித்து ஆய்வு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை

சென்னை: பாரிமுனை என்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதையை  வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இதை அமல்படுத்தவில்லை எனக் கூறி, டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை  படித்து பார்த்த நீதிபதிகள்,  ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாவிட்டால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதி வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்குவது குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்து விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளி வைத்தனர்.


Tags : NSC Bose Road ,iCourt ,Government of Tamil Nadu ,
× RELATED சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை...