×

பழநி, ஒட்டன்சத்திரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பழநி, மார்ச் 25: ஒட்டன்சத்திரம்  தாலுகா வடகாடு, அரசப்பிள்ளைபட்டி, எல்லப்பட்டி கிராமங்களில் நீர்நிலை, புறம்போக்கு நிலங்களில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 24 ஏக்கர்  ஆக்கிரமிப்பு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 5 ஏக்கர் நீர்நிலை  புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது. நேற்று  சத்திரப்பட்டி கருங்குளத்தில்  20 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் வசமிருந்த  சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் அகற்றபட்டது. இதேபோல் பழநி அருகே நெய்க்காரப்பட்டி இரவிமங்கலம் ஓடை, ஆயக்குடி ஓடை,  ஊமை சேர்வராயன் குளம், ஆண்டிபட்டி குதிரையாறு அணை, சிவகிரிப்பட்டி, பழநி வையாபுரி குளங்களில் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று நடந்தது. இப்பணியில் கோட்டாட்சியர் சிவக்குமார், தாசில்தார் சசி, நகரமைப்பு ஆய்வாளர் ஜான்சிராணி உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Tags : Palani, Ottanchattaram ,
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...