தேனி, மார்ச் 25:தேனி மாவட்டத்தில் துணை வட்டாட்சியர்கள் பதவி உயர்வில் வட்டாட்சியர்களாகவும், சிலருக்கு பணியிட மாறுதல் அளித்தும் கலெக்டர் முரளீதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இ பிரிவில் தலைமை உதவியாளராக பணிபுரிந்த அ.ஜலால் பதவி உயர்வில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவிற்கான தனிவட்டாட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தேர்தல் தனிவட்டாட்சியராக இருந்து வந்த ஜெ.பாலசண்முகம் தேனி டாஸ்மாக் சில்லறை விற்பனை மேலாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் சில்லறை விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்த மீனாட்சி ஆண்டிபட்டி தனிவட்டாட்சியராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். தேனி வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்து வந்த ஏ.காதர்செரீப் ஆண்டிபட்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இப்பணியிடத்தில் இருந்த எஸ்.இளங்கோ பெரியகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். உத்தமபாளையம் தேர்தல் பிரிவுக்கான துணை வட்டாட்சியராக பணிபுரிந்த மு.ரத்தினம் தேனி சமூக பாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்து வந்த மு.சுருளி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்புக்கான தனிவட்டாட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இப்பணியிடத்தில் இருந்து விடுப்பில் இருந்த க.தேவதாஸ் தேனி தேசிய நெடுஞ்சாலை அலகு 6க்கான தனிவட்டாட்சியராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
