×

உடன்குடி அருகே பனையேறும் பயிற்சி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்


உடன்குடி, மார்ச் 24: உடன்குடி அருகே பனை ஏறும் பயிற்சியை அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். உடன்குடி யூனியனுக்குட்பட்ட  லெட்சுமிபுரம் பஞ். ராமநாதபுரம், குமாரசாமிபுரம் பகுதியில் வேளாண்மை துறை சார்பில் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு பனை ஏறும் உபகரணங்கள்  வழங்கி பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார்.  வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், துணை இயக்குநர்கள் பழனி வேலாயுதம்,  செல்வின், உதவி இயக்குநர் வேங்கடசுப்பிரமணியன், திருச்செந்தூர் ஆர்டிஓ  புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், யூனியன் சேர்மன் பாலசிங்,  துணை சேர்மன் மீராசிராசூதீன், உடன்குடி பேரூராட்சி துணை தலைவர்  மால்ராஜேஷ், செட்டியாபத்து பஞ். தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். லெட்சுமிபுரம் பஞ். தலைவர் ஆதிலிங்கம்  வரவேற்றார்.

இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு  பனை தொழிலாளர்களுக்கு பனை ஏறும் உபகரணங்கள் வழங்கி பயிற்சியை துவக்கி  வைத்தார். திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், நகர செயலாளர்  ஜான்பாஸ்கர், பேரூராட்சி கவுன்சிலர்கள் அஸ்ஸாப், ஆபித், மாவட்ட  அமைப்பாளர்கள் நெசவாளரணி மகாவிஷ்ணு, இளைஞரணி ராமஜெயம், மாவட்ட துணை  அமைப்பாளர்கள் வர்த்தகஅணி இளங்கோ, விவசாயஅணி சக்திவேல், மாணவரணி அலாவுதீன்,  ராஜாபிரபு, இளைஞரணி மணப்பாடு ஜெயபிராகஷ், யூனியன் கவுன்சிலர் லெபோரின்,  குலசேகரன்பட்டினம் பஞ். துணை தலைவர் கணேசன், மாநில தலைமை செயற்குழு  உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட  கருப்புக்கட்டி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் நலச்சங்க தலைவர் நடராஜன்,  செயலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Palm ,Minister ,Anita Radhakrishnan ,Udankudi ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...