×

நாளை நடக்கிறது உலக வன தினத்தையொட்டி 21 மரக்கன்றுகளை கலெக்டர் நட்டார்

பெரம்பலூர், மார்ச் 24: பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உலக வன நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா, மாவட்ட வன அலுவலர் குகனேஷ் முன்னிலையில் 21 மரக்கன்றுகளை நட்டார்.மேலும் மரத்தின் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு வனத்துறை நாற்றாங்கால் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 1,000 மரக்கன்றுகள், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நடப்பட்டது. வனத்துறை நாற்றாங்கால் மூலம் 21,621 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு ஊரக வளர்சித்துறைக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளது. மேலும் தமிழ்நாடு நீடித்த நிலையான விவசாயிகள் நிலத்தின் பசுமை போர்வைத்திட்டத்தின் மூலம் வனத்துறை நாற்றாங்கால் மூலம் 1,70,700 மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வேளாண்மைத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்தார்.


Tags : World Wildlife Day ,
× RELATED இரூரில் உலக வனவிலங்கு தின கருத்தரங்கம்