×

சின்னமுத்தூரில் திருவிளக்கு பூஜை

கிருஷ்ணகிரி, மார்ச் 23: கிருஷ்ணகிரி அடுத்த சின்னமுத்தூர் வார வழிபாட்டு மன்றம் சார்பில், திருவிளக்கு பூஜை மற்றும் மாங்கல்ய பூஜை நடந்தது. இதையொட்டி சிந்தலக்கரை வெக்காளியம்மன் தவசித்தர் பீடத்தில் இருந்து அம்மன் சிலை கொண்டு வரப்பட்டு, கே.ஆர்.பி., அணை கூட்ரோட்டில் இருந்து சின்னமுத்தூர் வார வழிபாட்டு மன்றத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. வழியில் ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
பின்னர் வார வழிபாட்டு மன்றத்தில் வெக்காளியம்மன் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடை அணிந்து திருவிளக்கு மற்றும் மாங்கல்ய பூஜை செய்தனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சின்னமுத்தூர் வார வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags : Lantern Puja ,Chinnamuthur ,
× RELATED அரியலூர் பெரியநாயகி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை