×

லண்டனிலிருந்து சத்குரு பயணம்

கோவை, மார்ச் 22:  உலக அளவில் மண் வளத்தை பாதுகாக்க ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் 100 நாள் பைக் பயணத்தை துவக்கினார். லண்டனில் இருந்து கடந்த நேற்று இவர் பயணத்தை துவக்கியுள்ளார். ட்ரபல்கர் சதுக்கத்தில் துவங்கிய இந்த பயணத்தில் ஏராளமான மக்கள் திரண்டு அவரை வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனர். இங்கிலாந்து எம்.பி.க்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசினார். சத்குரு ஜக்கி வாசுதேவ் இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் வழியாக 30 ஆயிரம் கி.மீ. தூரம் தனி ஆளாக பைக்கில் பயணம் செய்து வருகிறார். 3 கண்டங்களில் 27 நாடுகளுக்கு பயணம் செய்துவிட்டு பின்னர் இந்தியா வரவுள்ளார். பயணத்தின்போது இவர் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் வல்லுனர்களை சந்தித்து மண் வளம் குறித்து பேசவுள்ளார். ஐநாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு நடத்தும் மாநாட்டில் பங்கேற்று பேசவுள்ளார். மாவோசில் உலக பொருளாதார மாநாட்டில் பேச இருக்கிறார். மண் வளம் தொடர்பாக அவர் 350 கோடி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளார்.

Tags : Satguru ,London ,
× RELATED திருவையாறு சத்குரு தியாகராஜர்...